உதகை படகு இல்ல வியாபாரிகள் கலெக்டரிடம் மனு

உதகை படகு இல்ல வியாபாரிகள் கலெக்டரிடம் மனு
X
உதகை படகு இல்லத்தில் மீண்டும் கடைகள் வைக்க அனுமதி தர வேண்டுமென, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில், உதகை படகு இல்ல வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், படகு இல்ல வளாகத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தோம். 48 வியாபாரிகளுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டது. கடை நடத்த அதற்கான வாடகை செலுத்தி வந்தோம். இதற்கிடையே கடந்த மாதம் கடைகள் அகற்றப்பட்டது.

இதனால், ஒரு மாதமாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். கடைகளை நம்பி பிழைப்பு நடத்தினோம். ஆகவே, எங்களுக்கு வேறு இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!