வீல் சேரில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி

வீல் சேரில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி
X

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்கு பதிவு முடிய சற்று நேரமே இருந்த நிலையில் வீல் சேரில் வந்து வாக்களித்த மூதாட்டியை அனைவரும் பாராட்டினார்கள்.

ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று விறுவிறுப்பான வாக்குப் பதிவுகள் நடைபெற்றது. இதில் வயது முதிர்ந்தவர்களும் தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். நேற்றிரவு வாக்குப்பதிவு நேரம் முடியும் நிலையில் உதகை தலையாட்டுமந்து பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை போலீசார் மற்றும் தனிப்படை காவலர் வீல்சேரில் அழைத்து வந்தனர். பின்பு மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் கூறும் போது, தனது வாக்கினை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளதென தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!