உதகையில் அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கி விபத்து

சாலை ஓரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து
குன்னூரில் இருந்து அரசு பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் உதகையை நோக்கி வந்தது அப்போது உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சிக்கியது. ஓட்டுனரின் சாதுரியத்தால் முன் சக்கரங்கள் மட்டும் பள்ளத்தில் சிக்கியது
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரித்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட இருந்த அரசுப் பேருந்து திடீரென பள்ளத்தில் சிக்கியது தெரியவந்தது.
உடனடியாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu