உதகை தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டார் தமிழக ஆளுநர்

உதகை தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டார் தமிழக ஆளுநர்
X

உதகை தாவரவியல் பூங்காவில், மரக்கன்று நட்ட தமிழக ஆளுநர் ரவி. 

நீலகிரிக்கு, 5 நாள் பயணமாக வந்துள்ள ஆளுநர், இன்று தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.

நீலகிரி மாவட்டத்திற்கு 5 நாள் பயணமாக வந்துள்ள தமிழக ஆளுனர் ரவி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் தங்கியிருக்கிறார். இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இயற்கை மரக்கன்றை (ஹெலியா கார்பஸ் ஒப்லாந்தஸ்) நட்டார்.

முன்னதாக இன்று, நீலகிரி மலை ரயிலில் குடும்பத்துடன் பயணித்த அவர், குன்னூர் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் உதகை ராஜ்பவனுக்கு வந்தடைந்தார்.

பின்பு மலை மாவட்டத்திற்கே உரித்தான, விக்கி பழ மரத்தின் மகத்துவத்தையும், தாவிரவியல் பூங்காவின் சிறப்புகளையும், மாவட்ட ஆட்சி தலைவர் இன்ன சென்ட் திவ்யா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் ஆகியோர், ஆளுநருக்கு எடுத்துரைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஸ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆசனூர்: சிறுத்தை குட்டிகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்!