உதகை மஞ்சூர் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் விழுந்த ராட்சத மரத்தை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் விழுந்த ராட்சத மரம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவிலிருந்து தற்போது வரை பெய்து வரும் கனமழையால் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள DFL பகுதியில் அதிகாலை வேளையில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக உதகை மஞ்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu