உதகையில் பொது வேலை நிறுத்தப் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

உதகையில் பொது வேலை நிறுத்தப் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
X
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது.

உதகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் பல்வேறு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து உதகை ஏடிசி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் தொழிலாளர்கள் உரிமையை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக கூறி இதனை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போது சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலுவலகத்தில் வழங்கப்படும் 404 ரூபாயினை தங்கள் ஊதியத்திலிருந்து செலவுத் தொகையை வழங்க வேண்டி உள்ளது. இதனால் செலவின் மொத்தத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பத்து ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அரசு ஊழியர்களாக நிரந்தரம் செய்யவேண்டும், பணியில் இருக்கும் போது உயிரிழந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாரிசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏடிசி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story