காந்தி ஜெயந்தி: உதகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

காந்தி ஜெயந்தி: உதகையில் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
X
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இருவரை பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இருவரை பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!