முழு ஊரடங்கு: ஊட்டி நகரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

முழு ஊரடங்கு:  ஊட்டி நகரில்   மாவட்ட ஆட்சியர்   ஆய்வு
X

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உதகை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்கள் மாற்றிடத்தில் வைக்க அதிகாரிகளுடன் ஆய்வு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உதகை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மக்கள் நெரிசல் அதிகமாக ஏற்படுவதை கருத்தில் கொண்டு உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இயங்கும் உழவர் சந்தை நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திற்கு நாளை மறுநாள் முதல் மாற்றப்படும் என்றும் ,உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள தினசரி சந்தையை ஏ,பி,சி என பிரிக்கப்பட்டு மாற்று நாட்களில் இயங்குவது குறித்து வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படும். கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் வைரஸ் தொற்று பரவல கட்டுப்படுத்த முடியும். இதனால் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரிபவர்கள் தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!