உதகை பள்ளியில் மாணவர்களுக்கான இலவச சட்ட மைய விழிப்புணர்வு முகாம்

உதகை பள்ளியில் மாணவர்களுக்கான இலவச சட்ட மைய விழிப்புணர்வு முகாம்
X

உதகை பள்ளியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் உதகை அரசு மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

முகாமுக்கு குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் தலைமை தாங்கி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி பேசும்போது, பெண் குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று விட்டு திரும்பும் வரை மற்றவர்களால் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நேர்ந்தால், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், மாணவர்கள் இடைநில்லாமல் கல்வி கற்கவேண்டும் என்றார்.

முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மணிவாசகம் மற்றும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!