உதகையில் குடிசைவாழ் மக்களுக்கு இலவச சிலிண்டர்கள்: பாஜகவினர் வழங்கல்

உதகையில் குடிசைவாழ் மக்களுக்கு இலவச சிலிண்டர்கள்: பாஜகவினர் வழங்கல்
X

உதகை நகர பாஜக சார்பில் நடந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி.

உதகை நகர பா.ஜ.க சார்பில் குடிசைவாழ் மக்களுக்கு இலவச சிலிண்டர்களை பாஜகவினர் வழங்கினர்.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உதகை நகரில் 15 வது வார்டில் பத்துக்கும் மேற்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் தங்கள் இல்லங்களில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய மத்திய அரசுக்கு மிக்க நன்றிகளைத் தெரிவிப்பதாக குடிசைவாழ் மக்கள் தெரிவித்தனர்.

உதகை நகர பாஜக சார்பில் நடந்த இந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் நகர தலைவர் பிரவீன், நகர செயலாளர்கள் சுரேஷ்குமார், ராகேஷ்,மாவட்ட செயலாளர் அருண்குமார், கிளைத் தலைவர் தீபா, வர்த்தக அணியின் மாவட்ட செயலாளர் நாகராஜ், உதகை நகர துணைத்தலைவர் ஹரி கிருஷ்ணன், வர்த்தக அணியின் நகர தலைவர் சுதாகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!