உதகை அருகே மரக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வன ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்
உதகை அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட விலை உயர்ந்த மரம் (பைல் படம்)
நீலகிரி மாவட்டம் சுமார் 65% வனப் பகுதியை கொண்டது இங்குள்ள வனங்களில் அரிய வகை மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி வனகோட்டம், நடுவட்டம் பகுதியில் ,அ.தி.மு.க., பிரமுகர் சஜீவன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது .
இங்கு,சில்வர் ஓக் மரம் வெட்ட அனுமதி வாங்கிகொண்டு, பல லட்சம் மதிப்பிலான காட்டுமரம் வெட்டியுள்ளதாக, வனத்துறைக்கு புகார் வந்தததையடுத்து வனத்துறை பறக்கும் படை குழு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், அனுமதியின்றி மரம் வெட்டியது உறுதிப்படுத்தப்பட்டது.
நடுவட்டம் வனச்சரகத்தில்,மரம் வெட்டிய காலகட்டத்தில் பணியில் இருந்த ரேஞ்சர்கள் சிவா, குமார், வனவர் தருமசக்தி, வன காவலர் நர்சீஸ் குட்டன் ஆகியநான்கு பேரை, கோவை மண்டல வன பாது காவலர் அன்வர்தீன், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
பட்டா நிலத்தில் அனுமதியின்றி காட்டுமரம் வெட்டியது தொடர்பாக உரிமையாளர் மீதுவன சட்டத்தில் வழக்கு பதிய நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி வனத்துறை அமைச்சர் கூறுகையில், "நடுவட்டம் பகுதியில், மரக்கடத்தலுக்கு துணைபோனதாக, இரண்டு ரேஞ்சர்கள், ஒரு வனவர், ஒரு வனகாப்பாளர் எனநான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்,என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu