உதகை மாரியம்மன் கோவில் நந்தவனத்திற்கு பூந்தொட்டிகள் அமைப்பு

உதகை தோட்டக்கலைத்துறை சார்பில் மாரியம்மன் கோவிலில் நந்தவனம் அமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் வைக்கப்பட்டன.

உதகை மாரியம்மன், காளியம்மன் திருக்கோவிலில் நந்தவனம் அமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் தோட்டக்கலைத் துறையில் பூந்தொட்டிகள் அமைக்க கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து தோட்டக்கலை இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன் தலைமையில் மாரியம்மன் கோவிலில் நந்தவனத்திற்கு வண்ண மலர்கள் கொண்ட 100 க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் நுழைவு வாயிலில் இருந்து யாகம் நடத்தும் இடங்கள் முழுக்க அடுக்கி வைக்கப்பட்டன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பூந்தொட்டிகளை கண்டு ரசிக்கும் வகையில் இந்த நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதேபோல் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களிலும் இந்த பூந்தொட்டிகள் வைக்கப்படும் என தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவில் நுழைவு வாயிலிலிருந்து அனைத்து பகுதிகளிலும் வண்ண மலர்களால் வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டிகளை பக்தர்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் எஸ் முத்துராமன் உட்பட அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future