பதவி உயர்வு பெற இருந்த தீயணைப்பு வீரர் நெஞ்சு வலியால் சாவு

பதவி உயர்வு பெற இருந்த தீயணைப்பு வீரர் நெஞ்சு வலியால் சாவு
X

நெஞ்சு வலியில் பலியான சிவகுமார்.

தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்பாளர் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதகை தீயணைப்பு நிலையத்தில் சிவகுமார் (50) என்பவர் முன்னணி தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். 25 ஆண்டுகள் தனது பணியை நிறைவு செய்ததை அடுத்து, வருகிற 1-ம் தேதி சிறப்பு நிலை அலுவலராக பதவி உயர்வு பெற இருந்தார். இந்த நிலையில் தீயணைப்பு நிலையத்தில் பணியில் இருந்தபோது சிவகுமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தொடர்ந்து உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவகுமார் இறந்தார். அவரது உடல் சொந்த கிராமமான அணிக்கொரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தீயணைப்பு துறையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற மீட்பு பணிகளில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த சிவகுமார் உடலுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி, உதவி அலுவலர் நாகராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து செலுத்தினர். பதவி உயர்வு பெற இருந்த நிலையில், இறந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story