உதகையில் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

உதகையில் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
X
தீ விபத்தில் எரிந்த டூ வீலர்.
உதகையில் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் சுனில் (31). நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து வந்தார். ஊட்டி படகு இல்லம் முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது, பேட்டரியில் இருந்து திடீரென தீப்பிடித்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

தகவலின் பேரில் ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பேட்டரி அகற்றப்பட்டது. மோட்டார் சைக்கிளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!