உதகை தனியார் விடுதியில் திடீர் தீ விபத்து-போலீசார் விசாரணை

உதகை தனியார் விடுதியில் திடீர் தீ விபத்து-போலீசார் விசாரணை
X

உதகையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர். 

தீ விபத்து குறித்து உதகை பி 1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியின் மேல் தளத்தில் இன்று காலை திடீரென தீ ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விடுதியில் தங்கியிருந்த நபர்கள் உடனடியாக தங்கும் விடுதியை விட்டு வெளியேறினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி விரைவாக தீயை அனைத்தனர். மேலும் மேல் தளத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தங்கும் விடுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

தீவிபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. தீ விபத்து குறித்து உதகை பி 1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!