உதகையில் ஊதியம் வழங்க வேண்டி களப்பணியாற்றியவர்கள் ஆட்சியரிடம் மனு

உதகையில் ஊதியம் வழங்க வேண்டி களப்பணியாற்றியவர்கள் ஆட்சியரிடம் மனு
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த கொரோனா களப்பணியாளர்கள்.

கேத்தி பகுதியில் கொரொனோ காலகட்டத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு .

உதகை அருகே உள்ள கேத்தி பேரூராட்சியில் கொரோனோ கள பணிக்காக 75 பேர் பணி அமர்த்தப்பட்டனர். நாள்தோறும் கேத்தி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஒவ்வொரு வீடாக சென்று பணியாற்றி வந்தனர்.

இரண்டு மாதமாக பணி செய்ததற்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என கூறிய களப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் பணி செய்ததற்கான ஒருநாள் தொகையாக முதலில் 640 என கூறி பணியமர்த்த பட்டதாகவும் தற்போது நாளொன்றுக்கு 200 வீதம் மட்டுமே சம்பளத் தொகை தருவோம் என கேத்தி பேரூராட்சி சார்பில் தெரிவிப்பதாக மனு அளித்த களப்பணியாளர்கள் தெரிவித்தனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்