உதகையில் படுகதேச பார்ட்டி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம்
மனு கொடுத்த படுகதேச கட்சியினர்.
கடந்த 75 ஆண்டு காலமாக படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க படுகர் இன மக்கள் போராடி வருவதாகவும் மலை மாவட்டத்தில் இருந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளில் படுகர் இன மக்களும் இருந்ததாக்க கூறப்படுகிறது. 1941 ஆம் ஆண்டு வரை படுகர் இன சமுதாயம் அரசினுடைய அரசிதழில் பழங்குடியின சமுதாயமாக இருந்ததை சுதந்திரம் பெற்ற பின்பு 1951 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பழங்குடியினர் பட்டியலில் படுக சமுதாய மக்களை சேர்க்கப்படவில்லை. இதனால் கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டு காலமாக இதற்கான பல்வேறு போராட்டங்களை படுகர் இன மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவான இன்று காந்தி சிலை முன்பு தங்களது மனுவை கொடுத்திருப்பதாகவும், எனவே மத்திய அரசு மாநில அரசு கொடுத்துள்ள பரிந்துரையை ஏற்று பழங்குடியினர் பட்டியலில் படுகர் இன மக்களை சேர்க்க வேண்டுமென உண்ணாவிரதம் இருந்த படுக தேச கட்சியினர் தெரிவித்தனர். மனு அளித்தபின் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட படுக தேச கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu