உதகையில் உரம் தராததால் முற்றுகையிட்ட விவசாயிகள்

உதகையில் உரம் தராததால்  முற்றுகையிட்ட விவசாயிகள்
X

உதகை, என்.சி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு விரைந்து உரங்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால் 25 சதவீத தொகையை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை.

நீலகிரி மாவட்டத்தில் 60,000 விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதில் 25 சதவீத தொகையில் என்.சி.எம்.எஸ்.சில் இடுபொருள்கள் வாங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இதுவரை உரங்கள் வழங்கப்படவில்லை. இன்று உதகை சேரிங்கிராசில் உள்ள என்.சி.எம்.எஸ். அலுவலகத்துக்கு உரங்கள் வாங்க விவசாயிகள் வந்தனர். கலப்பு உரம் இருப்பு இல்லாததால் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இதனால் சோலூர், தேனாடுகம்பை, கோடப்பமந்து போன்ற இடங்களில் வந்த விவசாயிகள் என்.சி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மலை காய்கறிகளுக்கு கலப்பு உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேல், கலப்பு உரம் வழங்காததால் காய்கறி பயிர்களுக்கு உரம் இடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிளுக்கு விரைந்து, உரங்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால் 25 சதவீத தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி