கேரட் விலை வீழ்ச்சியால், ஊட்டியில் விவசாயிகள் கவலை

கேரட் விலை வீழ்ச்சியால், ஊட்டியில் விவசாயிகள் கவலை
X

மேட்டுப்பாளையத்தில்  கேரட் விலை குறைந்துள்ளது. (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- எதிர்பார்த்த விலை கிடைக்காமல், ஊட்டி கேரட் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Nilgiri News, Nilgiri News Today- கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக கேரட், உள்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

ஊட்டியை பொருத்தவரை ஊட்டியில் அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு, முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்றவைகளுக்கு தனி மகத்துவம் உள்ளது. மற்ற ஊர்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை காட்டிலும், நீலகிரி மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் காய்கறி வகைகளுக்கு தனியாக சுவை உண்டு. அதனால், ஊட்டி காய்கறி என்றே, வியாபாரிகள் கூவி கூவி விற்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஊட்டியில் பயிர் செய்யப்படும் உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு, முட்டைக்கோஸ் பீட்ரூட் போன்ற காய்கறிகளுக்கு தனி வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் ஊட்டி கேரட் என்றால், பச்சையாக சாப்பிடுவதற்கே ருசியாக இருக்கும்.

கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் கேரட்டை அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று கழுவி, அதனை மூட்டைகளில் நிரப்பி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.45 ரூபாய் முதல் ரூ.60 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது. கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாவிட்டாலும், லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!