உதகையில் வரும் 22-ம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்
கலெக்டர் அலுவலகம் (பைல் படம்).
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு மாதம் 4-வது வெள்ளிக்கிழமையான வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழுக்கூட்டம் உதகை பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அந்த கோரிக்கைகளை வருகிற 19-ந் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்.72, உதகை-643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வதால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமாக குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu