/* */

உதகையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

உதகையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பு மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான வருகிற 17-ந் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழுக்கூட்டம் உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெறுகிறது.

விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அந்த கோரிக்கைகளை 10-ந் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்.72, ஊட்டி-643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களும் கலந்துகொள்வதால் விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 7 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  8. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  9. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  10. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...