உதகை: முன்களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விவசாய தம்பதி!
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், மருத்துவம், சுகாதாரம், காவல்துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த முன்களப் பணியாளர்கள், தொற்று அபாயத்திற்கு மத்தியில், ஊரடங்கு காலத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை , மஞ்சூர், எமரால்டு ,எம். பாலாடா, தலைகுந்தா உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, நஞ்சநாடு ஊராட்சி போர்த்தியாடா பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் - சந்தான லட்சுமி தம்பதியர், உணவு வழங்கினர்.
ஊரடங்கு காலத்தில் தங்களின் உடல் நலனை பொருட்படுத்தாமல், பொதுமக்களுக்காக பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கும் அதேபோல் நகரப் பகுதிகளை தூய்மையாக பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கும் உணவுகள் வழங்கியது, தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஊரடங்கு முடியும் வரை உணவு வழங்க இருப்பதாகவும், விவசாயி தம்பதியினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu