ஊட்டியில் பூண்டு கொள்முதல் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி
Nilgiri News, Nilgiri News Today- பூண்டு கொள்முதல் விலை உயர்வு (கோப்பு படம்)
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அங்கு உள்ள விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-வது போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டு இருந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக போதிய மழை பெய்து உள்ளது. இதனால் அங்கு பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்தது. எனவே விவசாயிகள் பூண்டுக்களை சாகுபடி செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் தற்போது நீலகிரி பூண்டு அதிகபட்சமாக கிலோ ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இமாச்சலபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால் அங்கு நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu