வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
X

பைல் படம்.

வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் http:/tnvelaivaaipu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்

கடந்த 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக அரசாணைப்படி சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சலுகை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட கடந்த 2-ம் தேதி முதல் 3 மாதங்களுக்குள், அதாவது வருகிற மார்ச் 1-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்கண்ட தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் அலுவலகத்துக்கு நேரில் ஆவணங்களுடன் வருகை தந்து புதுப்பிக்கும் வசதி உள்ளது.

ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http:/tnvelaivaaipu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!