நீலகிரி மாவட்ட பா.ஜ.க சார்பில் உதகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்ட பா.ஜ.க சார்பில் உதகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
X
நீலகிரி மாவட்ட பா.ஜ.க சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது, அதில் மறைந்த ஆடிட்டர் ரமேசுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட பா.ஜ.க.சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் மறைந்த ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் பா.ஜ.க வினர் பலர் கலந்து கொண்டனர்.

ஆடிட்டர் ரமேஷ்க்கு தமிழகம் முழுவதும் பாஜகவினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உதகையிலுள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் செயற்குழு கூட்டத்துடன் ரமேஷ் நினைவஞ்சலியும் நடைபெற்றது.

இச்செயற்குழு கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி கட்சியினரிடையே உரையாற்றப்பட்டது மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர தலைவர், ப்ரவீன், செயலாளர் சுரேஸ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராமன், உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future