உதகையில் முன்னாள் அமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

உதகையில் முன்னாள் அமைச்சர் தேர்தல் பிரச்சாரம்
X

எஸ்பி வேலுமணி.

திமுக அரசுக்கு காவல்துறை சாதகமாக இருந்து பரிசு பொருட்களை அவர்களது வாகனங்களிலேயே பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூடலூர், உதகை, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,அதிமுக செய்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தான் தற்போது திமுக தாங்கள் செய்ததாகச் சொல்லி மக்களிடம் வாக்குகள் சேகரிக்கின்றனர் என கூறினார். அதிமுக ஆட்சியில், நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை கல்லூரி மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டது என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசுக்கு காவல்துறை சாதகமாக இருந்து பரிசுப் பொருட்களை அவர்களது வாகனங்களிலேயே பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் சொத்து முடக்கம் என்பது தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் செயலாக உள்ளது. எது நடந்தாலும் தமிழகத்தில் அதிமுக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!