உதகையில் மின்ணணு வாக்கு பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி

வாக்குப்பதிவு எந்திரங்களை மின்னணு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்களை மின்னணு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திராஜ் கணிணியில் ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி உதகை நகராட்சியில் 99, குன்னூர் நகராட்சியில் 48, கூடலூர் நகராட்சியில் 53, நெல்லியாளம் நகராட்சியில் 51, அதிகரட்டி பேரூராட்சியில் 21, பிக்கட்டி பேரூராட்சியில் 17, தேவர்சோலை பேரூராட்சியில் 29, உலிக்கல் பேரூராட்சியில் 22, ஜெகதளா பேரூராட்சியில் 18, கேத்தி பேரூராட்சியில் 24, கீழ்குந்தா பேரூராட்சியில் 18, கோத்தகிரி பேரூராட்சியில் 33, நடுவட்டம் பேரூராட்சியில் 18, ஓவேலி பேரூராட்சியில் 22, சோலூர் பேரூராட்சியில் 18 மொத்தம் 491 வாக்குப்பதிவு, 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் 409 வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டன. பாதுகாப்பு அறைகளில் எந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu