உதகை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமைப்பு அகற்றம்

உதகை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமைப்பு அகற்றம்
X

உதகையில் ஆக்கிரமிப்பு அகற்றம். 

போலீஸ் பாதுகாப்புடன் இரும்பு குடோன், வாகனங்கள் பழுது பார்க்கும் கடை என 4 கடைகள் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது

உதகை காந்தல் முக்கோணம் பகுதியில் நகராட்சி வாகன நிறுத்துமிடம் உள்ளது. வாகன நிறுத்துமிடம் ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அவர் கடந்த 3 ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை செலுத்தவில்லை. இதனால் உதகை நகராட்சிக்கு ரூ.8 லட்சம் குத்தகை பாக்கி உள்ளது.

உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர்கள் வாகன நிறுத்துமிடத்துக்கு சென்று அளவீடு செய்தனர். வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டது தெரியவந்தது.

பொக்லைன் எந்திரம் மூலம் செட்டுகள் அகற்றப்பட்டன. கடைகளில் இருந்த பொருட்கள் வெளியே எடுத்து செல்லப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் இரும்பு குடோன், வாகனங்கள் பழுது பார்க்கும் கடை என 4 கடைகள் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்