கூடலூர் அரசு கல்லூரியில் 20 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழைப்பு

கூடலூர் அரசு கல்லூரியில் 20 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழைப்பு
X

பைல் படம்

கூடலூர் அரசு கல்லூரி வளாகத்தில் 20ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வருகிற 20-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கூடலூர் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை படிக்காத மற்றும் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், என்ஜினீயரிங் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றுகளுடன் நேரில் வர வேண்டும். இந்த தகவலை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future