மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்: பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு

மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்: பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு
X

பைல் படம்.

நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் உதகை ஆவின் வளாகத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்குகிறார். கமர்சியல் சாலை, லேக்வியூ, எட்டின்ஸ் சாலை, தமிழகம், அரசு ஆஸ்பத்திரி சாலை, தலைகுந்தா, தும்மனட்டி, தேனாடுகம்பை, பைக்காரா, எம்.பாலாடா, எல்லநள்ளி பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future