உதகையில் லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு

உதகையில் லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஊட்டி அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதகை அருகே காரப்பிள்ளு கிராமத்தை சேர்ந்தவர் பீமன் (68). இவர் கிராமத்தில் இருந்து ஊட்டிக்கு அரசு பேருந்தில் வந்துள்ளார். முகச்சவரம் செய்வதற்காக உதகை ஏ.டி.சி. பகுதியில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத லாரி ஒன்று பீமன் மீது மோதியது. இவ்விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உதகை நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!