உதகையில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

உதகையில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
X
சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊட்டி அருகே கப்பத்தொரை பகுதியை சேர்ந்த முஸ்தபா, 66, தோட்ட வேலை செய்து வந்தார். 7 ம் வகுப்பு படிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும், 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக அடிக்கடி துன்புறுத்தியுள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு, முஸ்தபாவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!