குன்னூரில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் நேரடி சேர்க்கை முகாம்
பைல் படம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் நீலகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
முகாமில் முன்னணி அரசு பொதுப்பணித்துறை, தனியார் தொழில் நிறுவனங்கள் நேரடி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை மேற்கொள்ள உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு பிரதி மாதம் குறைந்தபட்சம் ரூ.7,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி பெற்று என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றவர்கள் முழு திறன் மிக்கவர்களாக கருதப்பட்டு, மத்திய, மாநில தொழில் சார்ந்த அரசு பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
இதுகுறித்த தகவலுக்கு 9499055709 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu