மருந்தகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளான அசித்ரோமைசின் (Azithromycin), ஐவர்மெக்டின் (Ivermectin),டாக்ஸிசைக்ளின் (Doxycyline), பாராசிட்டமால் (Paracetamol), ஆகியமருந்துகளை விற்பனை செய்யும் பொழுது, கண்டிப்பாக மருத்துவர்களின்பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் சீட்டினை பெற்றுக் கொண்டு விற்பனை செய்யப்பட வேண்டும்.
உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள், வைரல் எதிர்ப்பு மருந்துகள் ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும்.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கண்ட மருந்துகளைநோயாளிகளுக்கு விற்பனை செய்தால், நோயாளியின் பெயர், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மருத்துவரின் தகவல்களையும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
வீட்டின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் பரிந்துரை செய்திருந்தால் அதற்குண்டான ஆதாரங்களை பெற்றுக் கொண்டு மருந்துகளை வழங்க வேண்டும்.எந்நிலையிலும், மேற்கூறிய மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டுஇல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் அதன் அடிப்படை விதிகள் 1945-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu