100 நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம் : நீலகிரி கலெக்டரிடம் மனு

100 நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம் : நீலகிரி கலெக்டரிடம் மனு
X
நீலகிரி மாவட்டத்தில் நூறு நாட்கள் வேலை திட்டத்தில் பாரபட்சம் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
உதகை கடநாடு கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

உதகை அருகே கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் சார்பில் நடைபெறும் 100 நாள் வேலைத் திட்டத்தில் சமீபகாலமாக திமுக-வை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்டோர் கடநாடு ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பாரபட்சமின்றி அனைவருக்கும் பணி வழங்கப்பட வேண்டும் எனவும் 15 ஆண்டுகளாக 100 நாள் வேலைத்திட்டத்தில் இதுபோன்று குறிப்பிட்ட ஆட்களுக்கு பணி வழங்கப்பட்டது இல்லை தற்போது இது அரங்கேறி வருவதாகவும் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தீர்வு காணப்படும் என கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil