உதகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பில் விழிப்புணர்வு

உதகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பில் விழிப்புணர்வு
X

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகையில், அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி கலெக்டர் உத்தரவின் பேரில், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில், பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு முகாம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. முகாமில் தேசிய பேரிடர் மீட்புப்படை இன்ஸ்பெக்டர் ஜெயபால் ராஜ் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர், அரக்கோணத்தில் இருந்து வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி உயிர் பாதுகாப்பு கவசங்கள் மூலம் மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டறிந்து விரைந்து மீட்பது குறித்து விளக்கப்பட்டனர். பேரிடரில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது, சாலை விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்களை எந்த முறையில் தூக்கி ஆம்புலன்சில் ஏற்ற வேண்டும் என்று செயல்விளக்கம் அளித்தனர்.

மேலும், பொருள் சேதத்தை விட உயிர் முக்கியம் என்பதால், பாதுகாப்பாக மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். மீட்புப்படை சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பு, பொறுப்பாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு நிவாரண மையங்களுக்கு அழைத்து செல்வது, பேரிடர் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிப்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!