உதகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம்

உதகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்.

மதவாத சக்திகளை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை மறுத்து, இஸ்லாமிய அடிப்படை உரிமையான ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து உதகை ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் சபிதீன் தலைமை தாங்கினார். இதில் முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்க கூடாது. ஹிஜாப் எங்களது உரிமை. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க தடையாக கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. மதவாத சக்திகளை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா