உதகை மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி ம.நே.ம.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

உதகை மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி ம.நே.ம.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
X

உதகை மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்திய 700 வியாபாரிகள் கைது.

உதகை மார்க்கெட் சீல் வைக்கப்பட்டதற்கு பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மனித நேய மக்கள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உதகை நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் வாடகை பாக்கி ரூ.38 கோடி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. சீல் நடவடிக்கைக்கு பின், நிலுவை வாடகை ரூ.42 லட்சம் வசூலாகியுள்ளது. ஆனால், பெரும்பாலான வியாபாரிகள் இன்னும் வாடகையை செலுத்தவில்லை. நகராட்சி நிர்வாகம் நிலுவை வாடகை செலுத்துவது குறித்து சில வழிமுறைகளை வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கபட்டுள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகம் 70% லிருந்து 50% ஆக வாடகையை செலுத்த கூறியுள்ளது. இதில் 7 வியாபாரிகள் 38 லட்சத்தை நகராட்சிக்கு செலுத்தி கடையை திறக்க அனுமதி பெற்றுள்ளனர். இந்நிலையில், இன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வியாபாரிகள் திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்க்கெட் பகுதியிலிருந்து வியாபாரிகள் திரண்டனர். முன்னதாக, காபிஹவுஸ் சந்திப்பில், போலீசார் தடுத்து நிறுத்தி 50 பெண்கள் உட்பட, 700 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!