உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேசிய பண மயமாக்கல் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உதகை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை முறைப்படி பாராளுமன்றத்தின் மூலம் திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக அதிகரித்து தினமும் ரூ.600 கூலி வழங்க வேண்டும், வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil