புதிய வகுப்பறை கட்டடங்களை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்

புதிய வகுப்பறை கட்டடங்களை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்
X

சிஐடியு., ஏஐடியூசி., போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் மஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குந்தா மின்வாரிய முகாம் அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது.

குந்தா மின்வாரிய முகாம் அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது. இந்த புதிய வகுப்பறைகளை திறக்க வலியுறுத்தி சிஐடியு., ஏஐடியூசி., போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் மஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு துவக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகள் நலன் கருதி கூடுதலாக புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதுவரைக்கும் திறக்கப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம் தலையிட்டு உடனடியாக புதிய வகுப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture