ஊட்டி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்

ஊட்டி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்
X

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கடந்த ஆண்டு ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.53.93 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழக அரசு கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தி வருகிறது. தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் போன்றவை உள்ளது.

கடந்த ஆண்டு ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.53.93 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில் ரூ.1.40 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி இருக்கிறது என்றார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் முதல்நிலை மண்டல மேலாளர் வெற்றிவேல், ஊட்டி மேலாளர் சபீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!