கொரோனா தடுப்பூசி ஊட்டியில் தயாரிக்க கோரிக்கை

கொரோனா தடுப்பூசி ஊட்டியில் தயாரிக்க கோரிக்கை
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லையாக நீலகிரியில் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் தயாரித்துவழங்கி வருகின்றன. கோவேக்சின் ஹைதராபாத்திலும் கோவிஷீல்டு புனேவில் தயாரித்து வருகின்றனர்.

மத்திய அரசு உடனடியாக மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையாக ஊட்டி இந்துஸ்தான் போட்டோபிலிம் தொழிற்சாலையை மாற்றி மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய ஆணை பிறப்பிக்கும் படி அன்பாலயத்தின் அனைத்துலக அன்பர் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் செல்வராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!