நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறுவர்கள்.
நீலகிரியில் இன்று 15 வயது முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்பி அம்ரித் துவக்கி வைத்தார். அதன் பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது கோவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடு தழுவிய தடுப்பு ஊசி செலுத்துவதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.
மாவட்டத்திலுள்ள பழங்குடியினருக்கு 100 சதவிகித தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதோடு, முதல் தவணை தடுப்பு ஊசி 99.5 சதவிகிதமும், இரண்டாம் தவணை 96 சதவிகிதமும் செலுத்தபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கிய 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் பணியை இன்று உதகையிலுள்ள பிரிக்ஸ் பள்ளியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ராஜாராமன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்திலுள்ள 212 பள்ளிகளைச் சார்ந்த 24,449 சிறார்கள் பயனடைகின்ற வகையில் 90 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி சிறார்கள் ஆர்வமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். தடுப்பு ஊசி செலுத்துவதற்காக இது நாள் வரை காத்திருந்ததாகவும், தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், செலுத்தியதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும், அனைவரும் செலுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu