நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்

நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கொரோனா தடுப்பூசி முகாம்.

பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. 258 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மையங்களில் தடுப்பூசி செலுத்த வந்தவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. மையங்களில் இருந்து தொலைவில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 20 நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் நிறைவடைந்தும் செலுத்தாதவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினர். மேலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்