கொரோனா தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி

கொரோனா தொற்றில்லா மாவட்டமானது நீலகிரி
X
நீலகிரி மாவட்டத்தில் தற்போது தொற்று பாதிப்பு முழுவதுமாக இல்லை.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறு தாலுகாக்களில், வாரம் தோறும் தடுப்பூசி முகாம் இடைவிடாது நடந்து வருகிறது.

இந்நிலையில், நாள்தோறும் தொற்றடைந்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும். தொற்றடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது.

அதன்படி நீலகிரி மாவட்டம் முழுவதும், கடந்த 24, யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, இறப்பு, பூஜியத்தை தொட்டது இதனால் நீலகிரி மாவட்டம் தொற்றில்லா மாவட்டமாக மாறியுள்ளது.

Tags

Next Story
ai as the future