உதகையில் வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில், தேவையின்றி வெளியே சுற்றியவர்களை, கொரோனா பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதேபோல் நீலகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, வாகன ஓட்டிகல் பலரும் வெளியே தேவையின்றி திரிகின்றனர். உதகையில் தேவையின்றி சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், பலரும் இதை அலட்சியப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் இன்று உதகை நகரில் சேரிங் கிராஸ் பகுதியில் தேவையின்றி சுற்றிய 30 க்கும் மேற்பட்டோரை போலீசார் கண்டறிந்தனர். அவர்களை அழைத்து அறிவுரை கூறியதோடு, மருத்துவக்குழுவை வரவழைத்து, சுற்றித் திரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!