உதகையில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில், முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வருவாய்த்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் 3 நபர்களுடன் வந்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், விதிமீறலில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். இதில் சுமார் 50 நபர்களுக்கு மேல் இன்று சேரிங்கிராஸ் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் உதகை ஏ.டி.சி. மத்திய பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, ஒருசிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!