உதகை நகராட்சி மூலம் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வீடுவீடாக ஆய்வு செய்யும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இன்னமும் குறையவில்லை. தொற்று அதிகரித்து வரும் நிலையில், உதகை நகரிலும் பல பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் அதிகமாகி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நகரில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், வீடுவீடாக சென்று, நகராட்சி மூலம் களப்பணியாளர்கள் கொரோனா பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, உதகமண்டலம் நகராட்சி மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், வீடுவீடாக ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் களப்பணியாளர்களுக்கு, இன்று நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு, அனைத்து வார்டுகளுக்கும் களப்பணியாளர்கள், ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!