உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 2 பள்ளிகள் மூடல்

உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 2 பள்ளிகள் மூடல்
X

மத்திய அரசு கட்டுபாட்டில் இயங்கும் லாரன்ஸ் பள்ளி.

பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டது.

உதகை அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் லாரன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியானது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கையாக பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டது. இதேபோல் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலும் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!