கொரோனா ஊரடங்கு: வெறிச்சோடி காணப்படும் உதகை படகு இல்லம் ஏரி

நீலகிரியில், கோடை சீசனில் களைகட்டி காணப்படும் சுற்றுலா தலங்கள் அனைத்தும், கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி உள்ளது.

ஆண்டுதோறும் கோடை சீசனில், நீலகிரி மாவட்டத்திற்கு சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா ரோஜா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட மேலும் பல சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. வாகனப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், உதகையில் அனைத்து சுற்றுலா பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

குறிப்பாக உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள படகு இல்லம், மக்கல் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், சலனமற்ற ஏரிக்கரையில் அதிகாலை வேளையில் ஏரியில் படகுகள் அணிவகுத்து நிற்கும் காட்சி, ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதே நேரம், சுற்றுலாவை நம்பியுள்ள பலரும் வாழ்வாதாரமிழந்து கலங்கியுள்ளனர். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று, அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!